புத்தளம் மாவட்ட அபிவிருத்தி தொடர்பில் புத்தளம் கத்தோலிக்க திருச்சபையினருக்கும், புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் இடையில் விஷேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது.
புத்தளம் மாவட்ட கத்தோலிக்க திருச்சபையின் அழைப்பின் பேரில் கலந்துரையாடல்; சிலாபத்தில் உள்ள கத்தோலிக்க திருச்சபையின் பிஷப் இல்லத்தில் அருட்தந்தை செல்டன் பெர்னான்டோ தலைமையில் இடபெற்றது.
![]() |
Paid Add |
இந்தக் கலந்துரையாடலில் உள்ளுராட்சி, மாகாண சபைகள் உள்நாட்டலுவல்கள் அமைச்சர் பேராசிரியர் சந்தன அபேரத்ன, பிரதி அமைச்சர் சுனில் ஜயகொடி உட்பட ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சி புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.
இந்தக் கலந்துரையாடலில் புத்தளம் தொகுதி கடலறிப்பு , கல்வி, உட்கட்டமைப்பு அபிவிருத்தி மற்றும் மதஸ்தலங்களின் அபிவிருத்தி உள்ளிட்ட அபிவிருத்திகள் தொடர்பாக விரிவாக கலந்துரையாடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.