புத்தளம் மாநகர சபை தேர்தலை முன்னிட்டு, ஶ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் 4ம் வட்டாரத்தின் கட்சி காரியாலயம் நேற்று வெள்ளிக்கிழமை மாலை ஶ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித் தலைவரும், மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான M.L.A.M . ஹிஸ்புல்லாஹ்வினால் திறந்து வைக்கப்பட்டது.
இந்நிகழ்வில் புத்தளம் மாநகர சபையின் முதன்மை வேட்பாளர் ரணீஸ் பதூர்தீன் உட்பட புத்தளம் மாநகர சபைக்குப் போட்டியிடும் வேட்பாளர்கள், உயர்பீட உறுப்பினர்கள்மற்றும் முன்னாள் நகர சபை உறுப்பினர்கள், கட்சியின் ஆதரவாளர்கள், போராளிகள் கலந்து சிறப்பித்தனர்.
தேர்தல் விளம்பரங்கள் ( Paid Add)