சாஹிப்
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா புத்தளம் நகரக்கிளையின் ஏற்பாட்டில் ரமழான் மாதத்தை முன்னிட்டு மஸ்ஜித்களில் ஹிஸ்புல் குர்ஆன் நிகழ்வில் கலந்துகொண்ட மாணவர்களுக்கு சான்றிதழ் மற்றும் பரிசு என்பன வழங்கி வைக்கப்பட்டன.
இம்முறை 35 மஸ்ஜிதுகளில் 1327 மாணவர்கள் ஹிஸ்புல் குர்ஆன் நிகழ்வில் கலந்து கொண்டனர்.
ஹிஸ்புல் குர்ஆன் நிகழ்வில் கலந்து கொண்ட 1327 மாணவர்களுக்கும் அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா புத்தளம் நகரக்கிளையினரால் சான்றிதழ்களும் , பெறுமதியான மாணவர்களுக்கான தண்ணீர் போத்தலும் வழங்கி வைக்கப்பட்னதுடன், ஹிஸ்புல் குர்ஆன் நிகழ்வுக்கு பொறுப்பாக இருந்து மாணவர்களை வழிநடாத்திய உலமாக்களுக்கு தலா 10000 ரூபா பணமும் அந்த அந்த மஸ்ஜித் நிர்வாகிகளின் கரங்களில் வழங்கி வைக்கப்பட்டன.
அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவின் புத்தளம் நகர கிளை தலைவர் அஷ்ஷெய்க் எம்.பி.எம்.ஜிப்னாஸ் (மிஸ்பாஹி) உள்ளிட்ட உலமாக்களினால் இந்த பரிசுப் பொருட்கள் மஸ்ஜித் நிர்வாகிகளிடம் ஒப்படைக்கப்பட்டன.
இனிவரும் ரமழான் மாதத்தில் புத்தளம் நகரக்கிளைக்கு உட்பட்ட அனைத்து மஸ்ஜித்களிலும் ஹிஸ்புல் குர்ஆன் நடைப்பெற வேண்டும் என்ற மிகப்பெரிய எதிர்பார்புடனும், ஹிஸ்புல் குர்ஆன் நிகழ்வில் கலந்து கொண்ட மாணவர்களை ஊக்குவிக்கும் நோக்கிலும் இந்த பரிசு பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டன.
குறித்த அன்பளிப்புக்களை வழங்குவதற்கு தனவந்தர் ஒருவர் இதற்கான நிதியுதவியை அன்பளிப்பாக வழங்கியுள்ளார்.