நமது நிருபர்
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசிய பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் ஜனாதிபதி சட்டத்தரணி நிசாம் காரியப்பரின் புத்தளம் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் பிரதி நிதியாக முன்னாள் வடமேல் மாகாண சபை உறுப்பினரும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் உயர் பீட உறுப்பினருமான எஸ்.எச்.எம்.நியாஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.
இது தொடர்பிலான கடிதம் புத்தளம் மாவட்ட செயலாளருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
எஸ்.எச்எம்.நியாஸ் புத்தளம் பிரதேச சபையின் முன்னாள் பிரதேச சபை உறுப்பினராக தனது அரசியல் பிரவேசத்தை ஆரம்பித்தார்.
இவர் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் நீண்டகால உறுப்பினராகவும், வடமேல் மாகாண சபையின் உறுப்பினராகவும் அரசியல் அனுபவத்தை கொண்டவர்.
அதேவேளை பாராளுமன்றத் தேர்தல்களிலும் எஸ்.எச்.எம்.நியாஸ் வேட்பாளராக போட்டியிட்டுள்ளார்.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் இளைஞர் அமைப்பாளராக செயற்பட்டுவரும் எஸ்.எச்.எம்.நியாஸ் மாவட்டத்தில் சகல சமூகத்தினருக்காகவும் செயலாற்றிவரும் ஒருவர் என்பதினாலும்,அவர் புத்தளம் மாவட்ட ஒருங்கிணைப்பு குழுவிற்கு நியமனம் செய்யப்பட்டமைக்கு கட்சியின் தலைமைத்துவத்திற்கும் ,அது போன்று பாராளுமன்ற உறுப்பினர் நிசாம் காரியப்பர் அவர்களுக்கும் கட்சியின் அங்கத்தவர்களும், மக்களும் நன்றி தெரிவித்துள்ளனர்.