மதுரங்குளி நிருபர் |
ஜனாதிபதி வேட்பாளர் ரணில் விக்ரமசிங்கவின் வெற்றியை உறுதிப்படுத்தும் நோக்கில் 'இயலும் ஸ்ரீ லங்கா' புத்தளம், அக்கரைப்பற்று பிரதேச அலுவலகம் மதுரங்குளி - கணமூலையில் நேற்று (01) மிக விமர்சையாக திறந்து வைக்கப்பட்டுள்ளது.
புத்தளம் - அக்கரைப்பற்று பகுதியில் உள்ள சகல கிராமங்களையும் ஒருங்கிணைந்த வகையில் ஜனாதிபதி வேட்பாளர் ரணில் விக்ரமசிங்கவின் தேர்தல் நடவடிக்கைகளை இந்த அலுவலகம் மேற்கொள்ளவுள்ளது.
ஐ.தே.கட்சியின் கடையாமோட்டை வட்டார அமைப்பாளர் ஏ.ஜே.எஸ்.மரிக்கார் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான அலி சப்ரி ரஹீம், சிந்தக அமல் மாயாதுன்ன, இராஜாங்க அமைச்சர்களான அசோக்க பிரியந்த, அருந்திக்க பெர்னாண்டோ, பிரியங்கர ஜயரத்ன உட்பட ரணில் விக்ரமசிங்கவை ஆதரிக்கும் அரசியல் பிரமுகர்கள், ஐ.தே.க தொகுதி, பிரதேச அமைப்பாளர்கள் மற்றும் இணைப்பாளர்கள் , ஆதரவாளர்கள் என பெரும் எண்ணிக்கையிலானோர் கலந்துகொண்டனர்.
இம்முறை ஜனாதிபதித் தேர்தலில் சிலிண்டர் சின்னத்துக்கு வாக்களித்து ரணில் விக்கிரமசிங்கவை அதிக வாக்குகளுடன் மீண்டும் இந்த நாட்டின் ஜனாதிபதியாக்குவதற்கு முழு வீச்சுடன் செயற்படப் போவதாகவும் பாராளுமன்ற உறுப்பினர்கள், அமைப்பாளர்கள் இதன்போது தெரிவித்தனர்.