புத்தளத்தில் இலவச வைத்திய முகாம்

புத்தளம் நிருபர் |

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா புத்தளம் நகரக் கிளையுடன் புத்தளம் நகர சபை மற்றும் புத்தளம் ஹோமியோபதி வைத்தியசாலை இணைந்து நடாத்திய இலவச மருத்துவ முகாம் சனிக்கிழமை ( 31) இடம்பெற்றது.

இதன்போது, நீரிழிவு நோய், அதிக இரத்த அழுத்தம், பெண்களுக்கு ஏற்படும் மாதவிடாய் தாமதமாதல், அன்றாடம் ஏற்படும் காய்ச்சல், வயிற்று வலி, உடல் பருமன், முடி உதிர்தல், பேண்களை அழித்தல், பாடசாலை மாணவர்களின் கிரகிக்கும் ஆற்றல், பித்தப்பை, சிறுநீரகக் கல் அகற்றல், வயிறு சம்பந்தமான நோய்கள், ஆண் பெண் மலட்டுத்தன்மை போன்ற நோய்களுக்கு இம்முகாமில் பரிந்துரைக்கப்படும் மருந்துகள் அனைத்தும் இலவசமாக வழங்கப்பட்டன.

வைத்தியர் எ.எச்.எம். இஸ்ரத் பர்வின் அவர்களால் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதுடன், ஆண்கள் பெண்கள் என பெரும் எண்ணிக்கையிலானோர் இலவச மருத்துவ உதவிகளை பெற்றனர்.

மேலும், இங்கு இலவசமாக நோய்களுக்கான இலவச மருத்துவ ஆலோசனைகளும் வழங்கப்பட்டன.

இந்நிகழ்வுக்கு பொறுப்பாக அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா புத்தளம் நகரக் கிளையின் உறுப்பினர் அஷ்ஷேக் ஸனூஸ் (அஷ்ரபீ) செயற்பட்டார்.



Post a Comment

Previous Post Next Post