புத்தளம் - வேப்பமடு மு.ம.வி. மாணவன் இஸ்லாமிய கீதம் போட்டியில் தேசிய மட்டத்திற்கு தெரிவு...!


சாஹிப்

புத்தளம் - வேப்பமடு முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் 6 ஆம் தரத்தில் கல்வி கற்கும் மாணவன் அப்ரின் அஹமட் நஷீத் இஸ்லாமிய கீதம் போட்டி நிகழ்ச்சியில் மாகாண மட்டத்தில் முதலாம் இடத்தைப் பெற்று தேசிய மட்டத்திற்கு தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

இஸ்லாமிய கலை, கலாசார மாகாண மட்ட போட்டி நிகழ்ச்சிகள் நேற்று (29) குருநாகல் ஹிஸ்புல்லாஹ் முஸ்லிம்  மத்திய கல்லூரியில் நடைபெற்றது.

இதன்போதே குறித்த மாணவன் பல பாடசாலைகளையும் சேர்ந்த மாணவர்கள் மத்தியில் தனது திறமையை வெளிக்காட்டி இஸ்லாமிய கீதம் போட்டியில் முதலிடத்தைப் பெற்று பாடசாலைக்கும் , ஊருக்கும் பெருமை சேர்த்துள்ளார்.

இவர், புத்தளம் - வேப்பமடுவைச் சேர்ந்த முஹம்மது றகீப்  மற்றும் எம்.எஸ்.பஹ்மியா  ஆசிரியை ஆகியோரின் செல்வப் புதல்வராவார்.

இந்த மாணவனை நெறிப்படுத்துவதற்கு உதவிய பாடசாலை அதிபர் எம்.ரி.எம்.மனாஸ் , பிரதி அதிபர் எம்.ஐ.எம்.ஸர்மில் உட்பட பாடசாலையின் இஸ்லாமிய தினக் குழுவினர், முகாமைத்துவ குழுவினர், அம்மாணவனுக்குபயிற்றுவித்த ஆசிரியர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் தமது நன்றிகளை  தெரிவிப்பதாக சாதனை படைத்த மாணவனின் பெற்றோர்கள் தெரிவித்தனர்.

தகவல், பட உதவி: 

பாரூக் பதீன் ஆசிரியர்

Post a Comment

Previous Post Next Post