எம்.எஸ்.பரீத் எனும் உண்மையின் குரல் ஓய்ந்தது...!

 

முஸ்தபா மஹ்ஷூர்

முல்லைத்தீவு தண்ணீரூற்றைப் பிறப்பிடமாகவும், புத்தளம் ரஹ்மத் புரதத்தை வசிப்பிடமாகவும் கொண்ட எம்.எஸ்.பரீத் அவர்கள்  இறை அழைப்பை ஏற்றுக்கொண்டார்.

எனது தந்தையாரின் தங்கை மகன். மச்சான்.

மனித நேயமிக்க இவர் நேர்மைக்கும் நீதிக்கும்   உண்மைக்குமாக  குரல் கொடுக்க வல்லவர்.

தனது இளமைக்காலத்தில் சமூக செயற்பாடுகளில் தீவிரமாக ஈடுபட்டவர்; மஸ்ஜித் பரிபாலனத்தில் நீதமாகச் செயற்பட்டவர்; கலைகள் மீது நாட்டம் கொண்டவர்; இல்யாஸ் கலை வட்டத்தில் இயக்கியவர் ; அரச சார்பற்ற நிறுவனக்காலத்தில் டிஎம்டியுவை ஸ்தாபித்து அகதிகள் நலன் புரிந்தவர்; ஊழலுக்கு எதிராக குரல் கொடுத்தவர்;

வைத்தியசாலை சுகாதாரப் பணியாளராக சேவையாற்றி இடப்பெயர்பின் பின் பணியில் புறக்கணிக்கப்பட்டவர்;அதனால் தொழில் பாதிப்புக்குள்ளானவர்; 

கைத்தொழிலில் ஆர்வலர்-பற்பொடித் தொழிலில் புத்தாக்கம் செய்தவர்-றஸீலா இன்டஸ்றீஸ் ஸ்தாபகர்;பண்பட்ட மனிதர்;

ஊர் வரலாறு பற்றிய கரிசணையுடையவர்; அவர் இப்போது ஊர்பற்றிய வரலாற்றை எழுதிக் கொண்டிருந்தார். அது முற்றுப்பெற முதலே முற்றுப் பெற்றார்.

பரீத் அவர்கள் புலிகள் காலத்தில் புலிகளால் கடத்தப்பட்டு துன்புறுத்தலுக்குள்ளானவர்; உண்மையாலும்  நேர்மையாகவும் தன்னைக்காத்தவர்;

அரசியல் செயற்பாட்டாளராகவும் பரிணமித்தவர். நல்லார்வலர். யதார்த்தவாதி வெகுஜன விரோதி என்பது அவருக்கும் பொருத்தமானது.

முஹம்மது சுல்தான் பரீத் முல்லைத்தீவு முஸ்லிம்களிடையே மறுதலிக்க முடியாத பெறுமானம் உடையவர்.

இவரது உரத்த குரலில் உண்மையும் நீதமும் எப்போதுமிருக்கும்.

அன்னாரை எல்லாம் வல்ல இறைவன் பொருந்திக்கொள்வானாக. மேலான ஜன்னத்துல் பிர்தௌஸை வழங்கியருள்வானாக.

அன்னாருக்காகப் பிரார்த்திப்போம்.

Post a Comment

Previous Post Next Post