ரிபாக்
எதிர் வருகின்ற ஜனாதிபதி தேர்தலில் ரணில் விக்கிரமசிங்க தோல்வி அடைந்தாலும் இறுதியில் ரணில் விக்ரமசிங்கவின் கையிலேயே நாட்டை ஒப்படைக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படும் என ஐக்கிய காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர் மழ்ஹர்தீன் காதர் முகைதீன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக மேலும் அவர் கூறும்போது தெரிவித்ததாவது,
ஜனாதிபதி தேர்தலில் ரணில் விக்ரமசிங்க தோல்வி அடைந்து வேறு ஒருவர் வெற்றி பெற்றாலும் கூட நாட்டை கொண்டு செல்ல முடியாத அளவுக்கு பொருளாதார நெருக்கடி ஏற்படும்.
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் ஆட்சி காலத்தில் நடந்தது போன்று மிகப்பெரிய ஆர்ப்பாட்டங்கள் நடைபெறுவதற்கு வாய்ப்புகள் அதிகமாக இருக்கிறது.
இறுதியாக ரணில் விக்ரமசிங்கையின் கையிலே நாட்டை ஒப்படையுங்கள் என்று கூறி மக்கள் வீதியில் இறங்கி போராட்டங்கள் நடாத்தும் சூழ்நிலை ஏற்படும்.
எனவே, இவ்வாறான சூழ்நிலையை ஏற்படாமல் இருக்க, தற்போது இருக்கின்ற ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் கையிலே நாட்டை குறிப்பிட்ட காலத்துக்கு ஒப்படைக்க வேண்டும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
He is not United Congress Party Leader.
ReplyDelete