உடப்பு பொலிஸ் நிலைய SI ஒருவர் பணிநீக்கம்...!

ரிபாக்

புத்தளம் - உடப்பு பகுதியில் நபர்கள் இருவர் மீது தாக்குதல் நடத்தியமை தொடர்பில் உப பொலிஸ் பரிசோதகர் ஒருவர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

புத்தளம் - உடப்பு பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றி வரும் உப பொலிஸ் பரிசோதகர் ஒருவரே இவ்வாறு பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

மேற்படி உப பொலிஸ் பரிசோதகர் தனது நண்பர்கள் சிலருடன் சேர்ந்து இருவர் மீது தாக்குதல் நடத்திய குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்டிருந்த நிலையிலேயே, அவர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார் எனத் தெரிவிக்கப்படுகிறது.

Post a Comment

Previous Post Next Post