ரிபாக்
புளிச்சாக்குளம் சிடார் விளையாட்டுக்கழகம் நடாத்திய மாபெரும் மென்பந்துக் கிரிக்கெட் சுற்றுப் போட்டியில் புளிச்சாக்குளம் croson விளையாட்டு கழகம் வெற்றிக் கிண்ணத்தை சுவீகரித்துக் கொண்டது.
அத்துடன், கடையாமோட்டை சிடார் விளையாட்டு கழகம் இரண்டாம் இடத்தை பெற்றுக்கொண்டது.
புளிச்சாக்குளம் சிடார் விளையாட்டு கழகத்தின் தலைவர் முஹம்மது மர்சூன் தலைமையில் நடைபெற்ற குறித்த மென்பந்து கிரிக்கெட் சுற்றுப் போட்டியின் இறுதிநாள் நிகழ்வுகள் கடந்த ஞாயிற்றுக்கிழமை (03) தாராக்குடிவில்லு மு.ம.வி விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்றது.
இறுதி நாள் நிகழ்வின் போது, அகில இலங்கை மக்கள் காங்கிரசின் புளிச்சாக்குளம் இணைப்பாளர் தேசகீர்த்தி, லங்கா புத்ர எஸ்.ஏ.இர்ஷாதின் அழைப்பின் பெயரில், கிரிக்கெட் சுற்றுப் போட்டியை ஆரம்பித்து வைப்பதற்காக, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு கிரிக்கெட் சுற்றுப் போட்டியை ஆரம்பித்து வைத்தார்.
அத்துடன் , கிரிக்கெட் சுற்றுப் போட்டியில் வெற்றிபெற்ற அணிகளுக்கு வெற்றிக் கிண்ணமும், பணப் பரிசில்களையும் வழங்கி வைப்பதற்காக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் சார்பில் முன்னாள் மாகாணசபை உறுப்பினர் என்.டி.எம். தாஹிரும், அகில இலங்கை மக்கள் காங்கிரசின் புளிச்சாக்குளம் இணைப்பாளர் தேசகீர்த்தி, லங்கா புத்ர எஸ்.ஏ.இர்ஷாதும் வழங்கி வைத்தனர்.
இதன்போது முதலிடத்தைப் பெற்றுக் கொண்ட அணியினருக்கு 80 ஆயிரம் ரூபா பணமும், வெற்றிக் கிண்ணமும், இரண்டாம் இடத்தை பெற்றுக் கொண்ட அணிக்கு 40 ஆயிரம் ரூபா பணமும் வெற்றிக் கிண்ணமும் வழங்கி வைக்கப்பட்டன.
மேலும் இந்த நிகழ்வில் முன்னாள் பிரதேச சபை உறுப்பினர்களான ஆசிக் , நிஜாம், அஸ்ஸபா பவண்டேசன் நிறுவனர் முஹம்மட் முர்ஷித், Best Choice உரிமையாளர் ஹபீல் மௌலவி, ஆர்.சுபாகரன், எம .ரமீஸ், Ever green விளையாட்டு கழக தலைவர் முகம்மது நவாஸ்தீன், எம்.எஸ்.எம்.இல்ஹாம் , கவிஞர் பொற்கேனி முளப்பர் உட்பட கட்சியின் முக்கியஸ்தர்கள், கல்விமான்கள், இளைஞர்கள் என பலர் கலந்து கொண்டனர்.
குறித்த மென்பந்து கிரிக்கெட் சுற்றுப் போட்டியில் 32 அணிகள் பங்கேற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.