சாஹிப்
நுரைச்சோலை, நாகவில்லு மற்றும் மதுரங்குளி பகுதிகளைச் சேர்ந்த ஐவர் சமாதான நீதிவான்களாக நேற்று (15) சத்தியப்பிரமாணம் செய்து கொண்டனர்.
மதுரங்குளியைச் சேர்ந்த முன்னாள் இராணுவ வீரர் ஜே.கே.நளின் ரேக்ஸ் பெரேரா, புத்தளம் மாவட்ட செயலகத்தில் அளவை, நிலுவை திணைக்களத்தில் கடமையாற்றும் எம்.இமாம் இம்தியாஸ், பூலாச்சேனை முஸ்லிம் மஹா வித்தியாலயத்தின் ஆசிரியர் எஸ்.எம்.அலிசப்ரி, வேப்பமடு முஸ்லிம் மஹா வித்தியாலயத்தின் ஆசிரியர் ஓ.எம்.இர்ஷாத் மற்றும் பாலாவி , நாகவில்லு ஜூம்ஆ மஸ்ஜித் பேஷ் இமாம் அஷ்ஷெய்க் என். அஸ்மீர் (உஸ்வி) ஆகிய ஐவரே இவ்வாறு சமாதான நீதிவான்களாக சத்தியப்பிரமாணம் செய்து கொண்டனர்.
புத்தளம் மாவட்ட நீதிவான் எஸ்.ஏ.எம்.சி.சத்துருசிங்க முன்னிலையில் இந்த ஐவரும் சமாதான நீதிவான்களாக சத்தியப்பிரமாணம் செய்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.