அலி சப்ரி ரஹீமை கட்சி உறுப்புரிமையிலிருந்து நீக்குவதற்கு இடைக்கால தடையுத்தரவு

புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீமை வெளியேற்றுவதைத் தடுக்கும் வகையில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸுக்கு கொழும்பு பிரதான மாவட்ட நீதிபதி திரு.சந்துன்விதான இன்று (07) இடைக்காலத் தடையுத்தரவு பிறப்பித்துள்ளார்.

அலி சப்ரி ரஹீம் தாக்கல் செய்த மனுவை விசாரணை செய்த நீதிவான், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் றிஷாத் பதியுதீன், காங்கிரஸின் செயலாளர் சுபைர்தீன் மற்றும் ஐக்கிய தேசியக் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் எம்.நயீமுள்ளாஹ் ஆகியோருக்கு  இந்த இடைக்காலத் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Post a Comment

Previous Post Next Post