வீதியைக் கடக்க முயன்ற பெண்ணுக்கு எமனாக வந்த பஸ்...!


சாஹிப்

வென்னப்புவ நகரில் வீதியைக் கடக்கச் சென்ற பெண்ணொருவர் பயணிகள் பஸ் ஒன்றில் மோதி நேற்று (13) உயிரிழந்துள்ளதாக வென்னப்புவ தலைமையக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

லுனுவில, ஜயா மாவத்தையைச் சேர்ந்த பெடில்லே பொடி மெனிகே எனும் 69 வயதுடைய பெண்ணொருவரே இந்த விபத்தில் உயிரிழந்துள்ளார் என பொலிஸார் குறிப்பிட்டனர்.

பாதசாரிகள் குழுவொன்று வீதியைக் கடக்கும்போது, நீர்கொழும்பு பகுதியில் இருந்து சிலாபம் நோக்கிச் சென்ற பஸ் ஒன்று நிறுத்தப்பட்டு மீண்டும் முன்னோக்கிச் செல்ல முற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது

இதன்போது, முன்பக்கமாக வீதியைக் கடக்க முற்பட்ட குறித்த பெண் மீது பஸ் மோதியுள்ளதுடன், உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார் என்றும் பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.

இந்த விபத்து சம்பவம் தொடர்பில் வென்னப்புவ போக்குவரத்து பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Post a Comment

Previous Post Next Post