மர்ஹூம் ஏ.ஆர்.எம்.ஜிப்ரியின் நான்காவது வருட நினைவு தின நிகழ்வும், 'ஏ.ஆர்.எம்.ஜிப்ரி ஒரு சகாப்தம்' நூல் அறிமுக நிகழ்வும் நேற்று (03) ஞாயிற்றுக்கிழமை சாய்ந்தமருது மாளிகைக்காட்டில், சிரேஷ்ட ஒலி - ஒளிபரப்பாளர் யூ.எல்.யாக்கூப் தலைமையில், சர்வதேசப் புகழ் ஒலிபரப்பாளர் பி.எச்.அப்துல் ஹமீத் முன்னிலையில் இடம்பெற்றது.
இந் நிகழ்வுக்கு, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் முதன்மை அதிதியாகக் கலந்துகொண்டதுடன், பாராளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம்.ஹரீஸ், முன்னாள் உள்ளுராட்சிமன்ற தவிசாளர்கள், உறுப்பினர்கள், கல்வியலாளர்கள், ஊடகவியலாளர்கள், மர்ஹூம் ஜிப்றியின் குடும்பத்தினர், கட்சியின் முக்கியஸ்தர்கள் மற்றும் இளைஞர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.