மாமனாரை கொலை செய்த மருமகன்...!

சாஹிப்

குடும்ப தகராறு காரணமாக மருமகன் , மாமனாரை கூரிய ஆயுதத்தால் தாக்கி கொலை செய்துள்ளதாக சிலாபம் தலைமையக பொலிஸார் தெரிவித்தனர்.

நேற்றிரவு (08) இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

மயில்குளம் பகுதியைச் சேர்ந்த 81 வயதான நபர் ஒருவரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார் எனத் தெரிவிக்கப்படுகிறது.

குடும்பத்தில் ஏற்பட்ட தகராறு முற்றிய நிலையில், மருமகன் தனது மாமனாரை இவ்வாறு படுகொலை செய்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

தனது மாமனாரை கொலை செய்த மருமகன், பின்னர் சில மருந்து மாத்திரையை உட்கொண்டதாகவும், அங்கிருந்தவர்கள் அவரை உடனடியாக சிகிச்சைக்காக சிலாபம் வைத்தியசாலையில் அனுமதித்துள்ளதாகவும் பொலிஸார் கூறினர்.

இவ்வாறு சிலாபம் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ள சந்தேக நபரான மருமகன், அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருவதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இந்த சம்பவம் தொடர்பில் சிலாபம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Post a Comment

Previous Post Next Post