முஹம்மட் ரிபாக்
புத்தளம் - புளிச்சாக்குளம் சிடார் விளையாட்டுக்கழகம் நடாத்தும் மாபெரும் மென்பந்துக் கிரிக்கெட் சுற்றுப் போட்டியின் இறுதிநாள் நிகழ்வுகள் இன்று (03) ஞாயிற்றுக்கிழமை புளிச்சாக்குளம் உமர் பாரூக் மகா வித்தியாலய விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்றது.
இறுதி நாள் நிகழ்வின் போது, அகில இலங்கை மக்கள் காங்கிரசின் புளிச்சாக்குளம் இணைப்பாளரும், சென்ரல் ஹார்ட்வெயார் உரிமையாளருமான எஸ்.எம்.இர்ஷாதின் அழைப்பின் பெயரில், கிரிக்கெட் சுற்றுப் போட்டியை ஆரம்பித்து வைப்பதற்காக, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டார்.
அத்துடன் முன்னாள் மாகாணசபை உறுப்பினர் என்.டி.எம். தாஹிர், முன்னாள் பிரதேச சபை உறுப்பினர்களான ஆசிக், பைசல் மரைக்கார், நிஜாம் மற்றும் அதிபர் சரீக் உட்பட கட்சியின் முக்கியஸ்தர்கள், இளைஞர்கள் பலர் கலந்து கொண்டனர்.
மேலும், புளிச்சாக்குளம் உமர் பாரூக் மகா வித்தியாலயத்தின் அபிவிருத்தி பணிகளுக்காக கொள்வனவு செய்யப்பட்ட காணியின் விஸ்தரிப்பு நடவடிக்கைகளுக்காக நிதியுதவி வழங்குமாறு இதன்போது பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாத் பதியுதீனிடம் கோரிக்கை ஒன்றும் முன்வைக்கப்பட்டது.
இந்த கோரிக்கையை ஏற்றுக் கொண்ட பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாத் பதியுதீன், இதற்காக தனது நிதியொதுக்கீட்டில் இருந்து ஒரு இலட்சம் ரூபாவை தனது இணைப்பாளர் எஸ்.எம்.இர்ஷாத் ஊடாக வழங்குவதாக இதன்போது வாக்குறுதியளித்துள்ளார்.