சாஹிப்
புத்தளம் - முந்தல், புளிச்சாக்குளத்தை சேர்ந்த நிஜாமுதீன் முஹம்மத் ஹபீல் புத்தளம் மாவட்ட சமாதான நீதிவானாக நேற்று வெள்ளிக்கிழமை புத்தளம் மாவட்ட நீதிவான் எஸ்.ஏ.எம்.சி.சத்துருசிங்க முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்து கொண்டார்.
புளிச்சாக்குளம் உமர் பாரூக் மகா வித்தியாலயத்தில் ரம் 8 வரை கல்வி கற்ற இவர், மஹரகம கபூரியா அரபுக் கல்லூரியில் மெளலவி அல் - ஆலிம் பட்டப்படிப்பை நிறைவு செய்துள்ளார்.
மேலும், புளிச்சாக்குளம் நகரில் அமைந்துள்ள THE BEST CHOICE நிறுவனத்தின் உரிமையாளரான இவர், 2012 முதல் புதுக்குடியிருப்பு அஸ்ஸபா பெளவுன்டேஷன் அமைப்பின் பொருளாளராக பணியாற்றி வருவதுடன், ஆன்மீக, சமூக, பணிகளிலும், பல சமூக சேவைகளில் ஈடுபட்டு வருகின்றார்.
இவர் முகம்மது நிஜாமுதீன் - பாத்திமா ஜரீனா தம்பதிகளின் இரண்டாவது புதல்வர் என்பது குறிப்பிடத்தக்கது.