சாஹிப்
மன்னார் தாராபுரத்தை பிறப்பிடமாகவும் புத்தளம் அல்காசிமி சிட்டியை வசிப்பிடமாகவும் கொண்ட எஸ். பர்ஜானா , தில்லையடி முஸ்லிம் மஹா வித்தியாலயத்தின் புதிய அதிபராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இவர், கடந்த மாதம் 26 ம் திகதி தனது கடமைகளை உத்தியோகபூர்வமாக பொறுப்பேற்றுக் கொண்டார்.
அண்மையில் நடைபெற்ற அதிபர் தரத்திற்கு ஆட்சேர்ப்புக்கான போட்டிப் பரீட்சையில் சித்தியடைந்த எஸ். பர்ஜானா ஆசிரியை, தில்லையடி முஸ்லிம் மஹா வித்தியாலயத்தின் புதிய அதிபராக நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.