பிரதமர் தினேஷ் குணவர்தன நாளை புத்தளம் விஜயம்

சாஹிப்

பிரதமர் தினேஷ் குணவர்தன இன்று (12) புத்தளத்திற்கு விஜயம் செய்யவுள்ளார்.

புத்தளத்திற்கு விஜயம் செய்யும் பிரதமர், முந்தல் பிரதேச செயலகத்தின் புதிய மூன்று மாடிக் கட்டடத்தை உத்தியோகபூர்வமாக திறந்துவைப்பார்.

இந்த நிகழ்வில் உள்நாட்டலுவல்கள் இராஜாங்க அசோக பியந்த, அமைவடமேல் மாகாண ஆளுநர் லஷ்மன் யாப்பா அபேவர்தன உட்பட புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள், புத்தளம் மாவட்ட செயலாளர் எச்.எம்.எஸ்.பி. ஹேரத் உட்பட அரச திணைக்கள பிரதானிகள்,  முந்தல் பிரதேச செயலக உதவி பிரதேச செயலாளர் எம்.எஸ்.பி.டயிள்யூ.ரி.எம்.எஸ்.பி. மல்வில உள்ளிட்ட பிரதேச செயல் உத்தியோகத்தர்கள் உட்பட பலரும் கலந்துகொள்றவுள்ளனர்.

மேலும், சிலாபம் மறைமாவட்ட ஆயர் இல்லாதிற்கும் பிரதமர் விஜயம் செய்யவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment

Previous Post Next Post