முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல கைது..!

நாட்டுக்கு 22,500 தரமற்ற தடுப்பூசி குப்பிகளை இறக்குமதி செய்த சம்பவம் தொடர்பில் முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல சற்று முன் CID யினரால் கைது செய்யப்பட்டார்.

இன்று காலை 09.00 மணிக்கு குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாகி வாக்குமூலம் ஒன்றை பெற்றுக் கொடுக்குமாறு நேற்றைய தினம் மாளிகாகந்த நீதவான் நீதிமன்றத்தினால் பிறப்பிக்கப்பட்ட உத்தரவுக்கு அமைய முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல இன்று முற்பகல் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் முன்னிலையானார்.

இதன்போது, சுமார் 10 மணித்தியாலங்களுக்கு மேலாக அவரிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்ட நிலையில் சற்றுமுன்னர் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

Post a Comment

Previous Post Next Post