புத்தளத்தில் ரயிலில் மோதி ஒருவர் உயிரிழப்பு

சாஹிப்

புத்தளம் - தில்லையடி ரயில் நிலையத்திற்கு அருகில் ரயிலில் மோதி நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார் என பொலிஸார் தெரிவித்தனர்.

நேற்றிரவு (12) கொழும்பில் இருந்து புத்தளம் நோக்கிப் பயணம் செய்த பயணிகள் ரயிலில் மோதியே குறித்த நபர் உயிரிழந்துள்ளார் எனத் தெரிவிக்கப்படுகிறது.

உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்ட நபர் தொடர்பில் இதுவரை தகவல் எதுவும் தெரியவில்லை என புத்தளம் பகுதிக்குப் பொறுப்பான திடீர் மரண விசாரணை அதிகாரி பதுர்தீன் முஹம்மது ஹிசாம் தெரிவித்தார்.

உயிரிழந்த நபரின் சடலம் புத்தளம் தள வைத்தியசாலையின் பிரேத அறையில் குளிர்சாதனப் பெட்டியில் வைக்கப்பட்டுள்ளதாகவும் புத்தளம் பகுதிக்குப் பொறுப்பான திடீர் மரண விசாரணை அதிகாரி பதுர்தீன் முஹம்மது ஹிசாம் மேலும் தெரிவித்தார்.

இந்த சம்பவம் தொடர்பில் புத்தளம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Post a Comment

Previous Post Next Post