கொழும்பு டிச. 01
குற்றப் புலனாய்வு பிரிவினரால் இன்று கைது செய்யப்பட்ட போதகர் ஜெரோம் பெர்னாண்டோவை இம்மாதம் 13 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு கோட்டை நீதிவான் நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
இன்று (01) காலை இரண்டாவது நாளாக வாக்குமூலம் வழங்குவதற்காக குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் ஆஜராகியிருந்த நிலையில் குற்றப்புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளால் அவர் கைது செய்யப்பட்டார்.
பௌத்தம் உள்ளிட்ட மதங்களை இழிவுபடுத்தியதாக குற்றம் சுமத்தப்பட்டு சில மாதங்களாக வௌிநாட்டில் இருந்து நாடு திரும்பிய ஜெரோம் பெர்னாண்டோ வாக்கு மூலம் வழங்குவதற்காக நேற்று (30) காலை குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாகிருந்தார்.
குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் ஆஜராகியிருந்த அவரிடம் நேற்று 08 மணிநேர வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டது.
எனினும், இன்றைய தினமும் குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் ஆஜராகுமாறு நேற்று (30) அவருக்கு விடுக்கப்பட்ட அழைப்பின் படி அவர் இன்று காலை குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் ஆஜராகியிருந்த நிலையிலேயே அவர் கைது செய்யப்பட்டு, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
