மிம்பர் மேடை என்பது உலகிலே மிகவும் புனிதத்துவம் வாய்ந்த ஓர் தெய்வீக அரியாசனம்.
இந்த மேடையில் நிகழ்த்தப்படும் ஒவ்வொரு வார்த்தைகளும் தூய இஹ்லாஸ் எனும் இதய சுத்தியுடன் ஏற்புடையது.
எனவே இந்த ஜும்ஆ குத்பா poster களை, விளம்பரப்படுத்தப்படுவது இஹ்லாஸ் எனும் மனத்தூய்மைக்கு ஆரோக்கியமானதல்ல.
நிகழ்ச்சிகள் மற்றும் கருத்தரங்குகள் தொடர்பாக poster பதிவிடுவது வேறு விடயம்.
இது மிம்பர் எனும் உலகிலேயே உயர்ந்த, இறையச்சம் நிறைந்த மேடையில் ஆற்றப்படும் உரை.
எனவே ஜும்ஆ மஸ்ஜித் நிர்வாகங்களும் இவ்வாறான poster களை சமூக வலைதலங்களில பதிவேற்றுகின்றனர்.
மேலும் குத்பா செய்யும் உலமாக்களும் தான் பிரசங்கம் நிகழ்த்தும் மஸ்ஜித்களின் பெயர்களையும் பதிவிடுகிறார்கள்.
இது படைத்தவன் விரும்பாத பிரபல்யம்,பெருமை போன்ற இழி குணங்களை பறைசாற்றுகின்ற நிலைக்கு நாம் அறியாமலே தள்ளப்படுவோம்.
எமது மூத்த, பழைய உலமாக்கள் எவ்வாறான நடைமுறைகளை பின்பற்றினார்களோ அவற்றை பின்பற்றுவோம்.
அவ்வாறான குத்பாக்கள்தான் உள்ளங்களுக்கு அதிக தாற்பரியத்தை உண்டாக்கும் என்பதில் சந்தேகமில்லை."
01/03/2023 காலை 7:00 am அளவில் ஒரு மூத்த ஆலிமுடன் கலந்துடையாடும் போது அவர் கூறியவை.
அஷ்ஷெய்க் என்.அஸ்மீர் உஸ்வி - புத்தளம்

