குடும்பத்துடன் சுற்றுலா சென்று நாடு திரும்பியவருக்கு விமான நிலையத்தில் காத்திருந்த அதிர்ச்சி...!

சாஹிப்

தனது குடும்பத்துடன் தாய்லாந்திற்கு சுற்றுலா சென்று இலங்கை திரும்பிய போதைப் பொருள் வியாபாரி ஒருவர் இன்று நண்பகல் கட்டுநாயக்க பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவின் அதிகாரிகள் குழுவினால் கைது செய்யப்பட்டுள்ளார். 

கொழும்பு-08, பொரளை பிரதேசத்தில் வசிக்கும் 44 வயதுடைய நபர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர், திருகோணமலை பிரதேசத்தில் ஐஸ் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட பொலிஸ் கான்ஸ்டபிளுக்கு போதைப்பொருள் வழங்கியவர் என தெரிவிக்கப்படுகிறது.

கைது செய்யப்பட்ட நபர், அவர் தனது குடும்ப உறுப்பினர்களுடன் தாய்லாந்துக்கு சுற்றுலா பயணத்தை முடித்துக் கொண்டு பேங்கொக்கில் இருந்து ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானமான UL-405 இல் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்த போதே கைது செய்யப்பட்டுள்ளார்.

இவ்வாறு கைது செய்யப்பட்ட நபர் மேலதிக விசாரணைகளுக்காக கொழும்பு பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவின் தலைமையகத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

Post a Comment

Previous Post Next Post