முன்னாள் விமானப் படை விரர் சடலமாக மீட்பு...!

ரஸீன் ரஸ்மின்

மதுரங்குளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஜோசப்வத்தை பிரதேசத்திலுள்ள வீதியோரத்தில் முன்னாள் விமானப் படை வீரர் ஒருவர் சடலமாக இன்று (28) மீட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சுமார் 36 வயது மதிக்கதக்க நபர் ஒருவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார் என மதுரங்குளி பொலிஸார் தெரிவித்தனர்.

சடலமாக மீட்கப்பட்டவர் இலங்கை விமானப் படையில் விமானப் படை வீரராக பணிபுரிந்த நிலையில், அதிலிருந்து விலகியுள்ளார் என விசாரணையில் தெரியவந்துள்ளது.

மதுரங்குளி பொலிஸாருக்கு கிடைக்கப் பெற்ற தகவலின் அடிப்படையில், மதுரங்குளி பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி தலைமையிலான பொலிஸ் குழு சம்பவ இடத்திற்கு சென்றதுடன், முதற்கட்ட விசாரணைகளையும் மேற்கொண்டனர்.

இதன்போது புத்தளம் பிராந்திய பொலிஸ் தடயவியல்  பிரிவினரும் சம்பவ இடத்தில் விசாரனைகளை முன்னெடுத்தனர்.

மேலும், பொலிஸ் மோப்ப நாய் சம்பவ இடத்திற்கு அழைத்து வரப்பட்டதுடன், அங்கு பொலிஸாரினால் தேடுதல் நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டன.

இது ஒரு கொலையாக இருக்கலாம் என தாம் சந்தேகிப்பதாக தெரிவித்த பொலிஸார், பல கோணங்களில் விசாரணைகளையும், முறைப்பாடுகளையும் பதிவுசெய்து  வருவதாகவும் பொலிஸார் குறிப்பிட்டனர்.

மேலும், பிரேத பரிசோதனையின் பின்னர் இது கொலையா அல்லது இயற்கை மரணமா என்பது பற்றி அறிய முடியும் எனவும் பொலிஸார் கூறினர்.

அத்துடன்,  சம்பவ இடத்திற்கு வருகை தந்த புத்தளம் மாவட்ட பதில் நீதிவான் , சம்பவ இடத்தில் நீதிவான் விசாரணையை நடத்தியதுடன், பிரேத பரிசோதனைக்காக சடலத்தை புத்தளம் தள வைத்தியசாலைக்கு கொண்டு செல்லுமாறு பொலிஸாருக்கு உத்தரவிட்டுள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மதுரங்குளி பொலிஸாரும், பொலிஸ் தடயவியல் பிரிவினரும் மேற்கொண்டு வருகின்றனர்.

படம்: காசிம்

Post a Comment

Previous Post Next Post