மதுரங்குளியில் கோயில் உடைக்கப்பட்டு சிலைகள் உள்ளிட்ட பொருட்கள் திருட்டு...!

ரஸீன் ரஸ்மின்

புத்தளம் - மதுரங்குளி , வேலாசிய வீதியில் ஜோசப் வத்தை பகுதியில் அமைந்துள்ள காளி கோவிலில் இருந்த பித்தளை சிலைகள் மற்றும் திரிசூலம் உட்பட அங்கு வைக்கப்பட்டிருந்த உண்டியல் என்பன திருடப்பட்டுள்ளதாக மதுரங்குளி பொலிஸார் தெரிவித்தனர்.

ஜோசப் வத்தை பகுதி மக்களால் நீண்ட பராமரிக்கப்பட்டு வந்த குறித்த காளி கோவிலில் இருந்த சுமார் இரண்டு அடி உயரமுள்ள இரண்டு சிலைகள் தரையில் வீசப்பட்டு உடைக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்

அதேநேரம், தரையில் வீசப்பட்டு உடைக்கப்பட்ட காளி சிலைகளுக்கு அருகில் இருந்த பித்தளையால் செய்யப்பட்ட திரிசூலம், காளி சிலைகள் மற்றும் உண்டியல் உள்ளிட்ட பொருட்கள் திருடப்பட்டுள்ளமை விசாரணையில் தெரியவந்துள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டனர்.

மேற்படி, காளி கோவில் மதுரங்குளி நகரத்திலிருந்து வேலாசிய வீதியில் சுமார் ஒரு கிலோமீற்றர் தொலைவில் அமைந்துள்ளது.

இந்த சம்பவம் தொடரபில் மதுரங்குளி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Post a Comment

Previous Post Next Post