மாதம்பையில் வீட்டு உரிமையாளர்களை அறையொன்றில் அடைத்துவிட்டு தங்கம், பணம் கொள்ளை...!

சாஹிப், ரிபாக்

மாதம்பை, தம்பகல்ல பிரதேசத்தில் வர்த்தகர் ஒருவரின் வீட்டில் சுமார் ஒன்றரை கோடிக்கும் அதிகமான பணம் மற்றும் தங்க நகைகள் என்பன கொள்ளையடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

குறித்த வர்த்தகரின் வீட்டுக்குள் கூரிய ஆயுதங்களுடன் நுழைந்த கொள்ளையர்கள் குழுவொன்று, அந்த வீட்டின் உரிமையாளர்களை அறையொன்றில் அடைத்து வைத்து இந்த கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.

நேற்று (18) இரவு 7 மணியளவில் வாள்கள் மற்றும் கூரிய ஆயுதங்களுடன் வேனில் வந்த நான்கு பேர் கொண்ட கும்பல் இந்தக் கொள்ளைச் சம்பவத்தை மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

தம்பகல்ல பிரதேசத்தில் குறித்த வீட்டின் இரண்டு அறைகளில் இருந்து சுமார் 93 இலட்சம் ரூபா பணம் மற்றும் 35 பவுண் தங்க நகைகள் என்பவற்றை கொள்ளையர்கள் கொள்ளையடித்து சென்றுள்ளதாக இந்த வீட்டின் உரிமையாளர் பொலிஸில் செய்த முறைப்பாட்டில் தெரிவித்துள்ளார். 

குறித்த சம்பவத்திற்கு முகங்கொடுத்த தம்பகல்ல வீட்டின் உரிமையாளர் தேங்காய் விற்பனை செய்யும் வியாபாரி எனவும், அதேவேளை அவர் வேறு சில தொழிலிலும் ஈடுபட்டு வருவதாகவும் பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இந்த கொள்ளைச் சம்பவத்தின் போது, அறை ஒன்றுக்குள் அடைக்கப்பட்டிருந்த அந்த வீட்டின் உரிமையாளர்கள் கதவுகளை உடைத்துக் கொண்டு வெளியே வந்ததாகவும் , அதன் பின்னர் மாதம்பை பொலிஸில் இதுபற்றி முறைப்பாடு செய்ததாகவும் கூறப்படுகிறது.

Post a Comment

Previous Post Next Post