சாஹிப்
புத்தளம் - கங்கைவாடி பகுதியில் புள்ளிச்சுறா மீனொன்று வலையில் சிக்குண்டு உயிரிழந்த நிலையில் கரையொதுங்கியுள்ளது.
குறித்த சுறா மீன் வலையில் சிக்குண்டு உயிரிழந்த நிலையில் நேற்று (10) கரையொதுங்கியதாக புத்தளம் வனாத்தவில்லு வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் தெரிவித்தனர்.
இவ்வாறு கரையொதுங்கிய புள்ளிச்சுறா மீன் சுமார் 25 அடி நீளமுடையது எனவும் 2000 கிலோ கிராம் எடை கொண்டு காணப்படுவதாகவும் வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் தெரிவித்தனர்.
