ரிபாக்
கற்பிட்டி கோட்டக் கல்வி அலுவலகத்திற்கு உட்பட்ட பூலாச்சேனை முஸ்லிம் மஹா வித்தியாலயத்தின் வருடாந்த பரிசளிப்பு விழாவும் ,கணினி பிரிவு திறந்து வைக்கும் நிகழ்வும் மிகவும் விமரிசையாக இடம்பெற்றது.
பாடசாலையின் அதிபர் எச்.ஏ.முக்தார் தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் புத்தளம் வலயக் கல்விப் பணிப்பாளர் ஏ.எச்.எம். அர்ஜுனா , உதவி கல்விப்பணிப்பாளர் எம்.காந்திலதா, கோட்டக் கல்விப்பணிப்பாளர் என்.எம்.ஆர்.டீ.பெர்னான்டோ, முன்னாள் மாகாண சபை உறுப்பினர்களான ஏ.எச்.எம்.ரியாஸ், எஸ்.எச்.எம்.நியாஸ், என்.ரி.எம்.தாஹிர், ISRC நிறுவனத்தின் பணிப்பாளர் ஏ.எம்.மிஹ்லார் , ISRC Sri Lanka நிறுவனத்தின் தலைவர் பாரூக் பதீன் ஆசிரியர் உட்பட அதிபர்கள், ஆசிரியர்கள், பாடசாலை அபிவிருத்தி சங்க உறுப்பினர்கள், பழைய மாணவர் சங்க உறுப்பினர்கள் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.
அத்துடன், குறித்த பாடசாலையின் புதிய கணினி பிரிவு அதிதிகளால் மாணவர்களின் பாவனைக்காக திறந்துவைக்கப்பட்டது. இந்த கணினி பிரிவுக்கு தேவையான கணினிகளை இளம் தொழிலதிபர் ரிகாஸ் ஹாஜியார் அன்பளிப்புச் செய்துள்ளார்.
இந்த நிகழ்வில் மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் இடம்பெற்றதுடன், ஐந்தாம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தி பெற்ற மாணவர்களும், உயர்தரப் பரீட்சையில் சித்தி பெற்று பல்கலைக்கழகம் தெரிவான மாணவர்களும் கௌரவிக்கப்பட்டனர்.
அத்தோடு, நிகழ்வுக்கு வருகை தந்த அதிதிகளும் நினைவுச் சின்னம் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.
இதேவேளை, பூலாச்சேனை முஸ்லிம் மஹா வித்தியாலயத்தின் முகாமைத்துவக் குழு மற்றும் பாடசாலை அபிவிருத்திக் குழு ஆகியோரின் வேண்டுகோளுக்கிணங்க, பாடசாலையின் பெளதிக வளப் பற்றாக்குறைகளை நிவர்த்தி செய்யும் முகமாக முதல் கட்டமாக ஐந்து வகுப்பறைகளைக் கொண்ட கட்டடம் ஒன்றை நிர்மாணித்துக் கொடுப்பதற்கு ISRC SRI Lanka நிறுவனம் முன்வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.





