புத்தளம் தெற்கு கோட்டக் கல்வி அலுவலகத்திற்கு உட்பட்ட பெருக்குவற்றான் முஸ்லிம் மஹா வித்தியாலயத்தின் சிறுவர்தின நிகழ்வுகள் பாடசாலை அதிபர் எம்.எச்.எம்.ராசிக் தலைமையில் இடம்பெற்றது.
"எல்லாவற்றையும் விட பிள்ளைகள் பெறுமதியானவர்கள்" எனும் தொனிப் பொருளில் இடம்பெற்ற இந்த சிறுவர் தின நிகழ்வில் மாணவர்களுக்கான விளையாட்டு போட்டிகள், வீதி ஊர்வலம் மற்றும் கலை, கலாச்சார நிகழ்வுகளும் இடம்பெற்றன.
அத்துடன், பாடசாலையில் கல்வி பயிலும் சகல மாணவர்களுக்கும் பீனீக்ஸ் லங்கா உரிமையாளர் ஆர்.றிப்னாஸ் தண்ணீர் போத்தல்களை அன்பளிப்பாக வழங்கினார்.
மேலும் பாடசாலை, ஆரம்ப பிரிவு மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்களை ஆசிரியர் எஸ்.எல்.எஸ்.ஜெனீஸ் அன்பளிப்பாக வழங்கி வைத்தார்.
இந்த சிறுவர் தின நிகழ்வில் ஆசிரியர்கள், மாணவர்கள், பாடசாலை அபிவிருத்திச் சங்க உறுப்பினர்கள் பழைய மாணவர்கள் என பலர் கலந்து சிறப்பித்தனர்.
அத்துடன், பெற்றோர்களால் குளிர்பானங்களும், இனிப்புகளும் மாணவர்களுக்கு வழங்கி வைக்கப்பட்டன.
- ரஸீன் ரஸ்மின் -



