உயர்தர மாணவனை காணவில்லை

ரஸீன் ரஸ்மின்

புத்தளம், JP வீதியில் வசித்து வந்த, 19 வயதுடைய முஹம்மது அப்பாஸ் முஹம்மது அம்ஹர் என்ற மாணவர், நேற்று (01) இரவு முதல் காணாமல் போயுள்ளார் என அவரது தந்தை தெரிவித்தார்.

நேற்றிரவு வீட்டில் படித்துக் கொண்டிருந்த குறித்த மாணவன் திடீரென வீட்டை விட்டுச் சென்றவர், இன்றுவரை (02) வீடு வந்து சேரவில்லை எனக் கூறினார்

வீட்டை விட்டு வெளியேறிய போது டவுசர், மஞ்சள் நிறமுடைய வரியிலான டீ சேர்ட் அணிந்திருந்த நிலையில் சென்றுள்ளார்.

எனவே இவரைக் கண்டவர்கள் உடனடியாக 0715500934, 0753955368 எனும் இலக்கங்களுடன் தொடர்புகொள்ளுமாறும் அந்த மாணவனின் தந்தை கேட்டுக்கொண்டார்.

காணாமல் போன மாணவன் மதுரங்குளி, கடயாமோட்டை மத்தியக் கல்லூரியில் உயர்தரம் கற்கும் மாணவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Post a Comment

Previous Post Next Post