பாலாவி - முல்லை ஸ்கீம் நூரானிய்யா மஸ்ஜிதில் மறைவான ஜனாஸா தொழுகை

- ரிபாக் -

பலஸ்தீன் - காஸாவில் இஸ்ரோலினால் மேற்கொள்ளப்படும் மனிதாபிமானமற்ற இனப்படுகொலையினால் ஷஹீதான பாலஸ்தீனர்களுக்காக இன்று புத்தளம் பாலாவி முல்லை ஸ்கீம் நூரானிய்யா ஜூம்ஆ மஸ்ஜிதில் மறைவான ஜனாஸா தொழுகை ( காயிபான) இடம்பெற்றது.

பலஸ்தீன் மற்றும் காஸாவுக்கு எதிராக இஸ்ரேல், தொடர்ச்சியாக வான் வழித்தாக்குதல்களை நடத்தி வருவதுடன் இதுவரை  குழந்தைகள், வயோதிபர்கள் உட்பட ஆண்கள், பெண்கள் என 4000 இற்கும் மேற்பட்டோர் ஷஹீதாக்கப்பட்டுள்ளதோடு, பல்லாயிரக் கணக்கானோர் படுகாயமடைந்துள்ளனர்.

எனவே இத்தாக்குதலில் மரணித்தவர்களுக்காக மறைவான ஜனாஸா தொழுகை நடாத்தி, பலஸ்தீனில் அமைதி நிலவவும் முஸ்லிம்களின் உயிர், உடைமைகள் பாதுகாக்கப்படவும்  அனைவரும் ஒன்றுசேர்ந்து துஆ பிரார்த்தனையில் ஈடுபடுவதற்கான ஏற்பாட்டை செய்யுமாறு அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா வேண்டிக்கொண்டது.

இதற்கிணங்க, புத்தளம் பாலாவி முல்லை ஸ்கீம் நூரானிய்யா ஜூம்ஆ மஸ்ஜிதில்  ஜூம்ஆ தொழுகையின் பின்னர் மறைவான ஜனாஸா தொழுகை ( காயிபான) இடம்பெற்றதுடன், விஷேட துஆ பிரார்த்தனையும் இடம்பெற்றது.

மௌலவி அப்துல் ஹலீம் குறித்த மறைவான ஜனாஸா தொழுகையை நடத்தினார்.

இதில் சிறுவர்கள் , வயோதிபர்கள் உட்பட பெரும் எண்ணிக்கையிலானோர் கலந்துகொண்டனர்.



Post a Comment

Previous Post Next Post