சீரற்ற காலநிலை காரணமாக புத்தளத்தில் 925 பேர் பாதிப்பு

- ரிபாக் -

சீரற்ற காலநிலை காரணமாக, புத்தளம் மாவட்டத்தில் 925 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக புத்தளம் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் கடமைநேர அதிகாரியொருவர் தெரிவித்தார்..

அந்த வகையில், புத்தளம் மாவட்டத்தின் வென்னப்புவ மற்றும் நாத்தாண்டி அகிய பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட 11 கிராம சேவகர் பிரிவுகளில் 228 குடும்பங்களைச் சேர்ந்த 925 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

வென்னப்புவ பிரதேச செயலாளர் பிரிவில் 07 கிராம சேவகர் பிரிவுகளில் 202 குடும்பங்களைச் சேர்ந்த 835 பேரும் நாத்தாண்டி பிரதேச செயலாளர் பிரிவில் நான்கு கிராம வேகவர் பிரிவுகளில் 26 குடும்பங்களைச் சேர்ந்த 90 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

பாதிக்கப்பட்டுள்ள குடும்பங்களுக்கு அந்தந்த பிரதேச செயலாளர்களின் மேற்பார்வையில் பிரதேச செயலக உத்தியோகத்தர்களால் சமைத்த உணவுகளும், குடிநீரும் வழங்கப்பட்டு வருவதாக புத்தளம் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் கடமை நேர அதிகாரி மேலும் கூறினார்.

Post a Comment

Previous Post Next Post