ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸில் இருந்து பாராளுமன்ற உறுப்பினர் நஸீர் அஹமட் நீக்கப்பட்டமை சட்டபூர்வமானது என உயர் நீதிமன்றம் வௌ்ளிக்கிழமை (06) அறிவித்துள்ளது.
உயர் நீதிமன்ற நீதியரசர்களான பிரிதி பத்மன் சூரசேன மற்றும் மஹிந்த சமயவர்தன ஆகியோர் தலைமையிலான நீதியரசர்கள் குழாம் முன்னிலையில் இந்த மனு ஆராயப்பட்ட போதே இவ்வாறு தீர்மானித்துள்ளது.
இந்த உயர்நீதிமன்ற தீர்ப்பானது வரலாற்றில் முக்கிய இடம்பிடிக்கும் என்றும் எம்.பி பதவியை எடுத்து விட்டு கட்சி தாவுவோருக்கு நல்ல பாடத்தை புகட்டும் என்றும் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
மேலும், குறித்த உயர்நீதிமன்றத் தீர்ப்பின் பிரகாரம் அமைச்சர் ஹாபிஸ் நஸீர் அஹ்மட் எம்.பி பதவியை இழக்கும் வாய்ப்பு உள்ளது என்றும் அவர் மேலும் கூறியுள்ளார்.
