முஹம்மட் ரிபாக்
வடக்கு முஸ்லிம்கள் விடுதலைப் புலிகளினால் பலவந்தமாக வெளியேற்றப்பட்டு 33 வருடங்கள் நிறைவடைந்துள்ளதை முன்னிட்டு, மக்கள் மறுமலர்ச்சி முன்னணியின் ஏற்பாட்டில் " வடக்கு முஸ்லிம்களின் 33 வருட வாழ்வியல்" எனும் திறந்த கலந்துரையாடலொன்று இடம்பெற்றுள்ளது.
இந்த கலந்துரையாடல் இன்று (28) சனிக்கிழமை மாலை 3.30 மணிக்கு புத்தளம் - தில்லையடி அல்ஜித்தாவிலுள்ள மக்கள் மறுமலர்ச்சி முன்னணியின் அலுவல வளாகத்தில் இடம்பெறும்.
மக்கள் மறுமலர்ச்சி முன்னணியின் பொதுச் செயலாளர் எஸ்.எம்.மனாப்தீன் தலைமையில் இடம்பெறவுள்ள இந்த நிகழ்வில் வடக்கு முஸ்லிம்களின் உரிமைக்கான அமைப்பின் பொருளாளர் எம்.எம்.அமீன், முன்னாள் உதவிக் கல்விப் பணிப்பாளர் இஸட்.ஏ.சன்ஹீர் ஆகியோர் சிறப்பு கருத்துரைகளை வழங்கவுள்ளனர்.
மேற்படி கருத்துரைகளைத் தொடர்ந்து, சிறப்புக் கலந்துரையாடல் இடம்பெறவுள்ளதால் ஆர்வலர்கள் அனைவரையும் வருகை தருமாறு ஏற்பாட்டுக் குழு அழைப்பு விடுத்துள்ளது.
