அகில இலங்கை சமுர்த்தி அபிவிருத்தி மற்றும் விவசாய ஆராய்ச்சி உதவி உத்தியோகத்தர்கள் சங்கத்தின் புத்தளம் மாவட்டத் தலைவராக சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர் ஜே.எட்வின் பீலிக்ஸ் (ராஜா) தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
மேற்படி சங்கத்தின் புத்தளம் மாவட்ட மாநாடு சிலாபம், லெட்ரோஸ் வரவேற்பு மண்டபத்தில் இடம்பெற்ற போதே குறித்த சங்கத்தின் புத்தளம் மாவட்ட தலைவராக இவர் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
இந்த நிகழ்வில் அகில இலங்கை சமுர்த்தி அபிவிருத்தி மற்றும் விவசாய ஆராய்ச்சி உதவி உத்தியோகத்தர்கள் சங்கத்தின் செயலாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான ஜகத் குமார பிரதம அதிதியாக கலந்துகொண்டதுடன் சங்கத்தின் ஏனைய உறுப்பினர்களும், புத்தளம் மாவட்டத்தில் பணியாற்றும் சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் பலரும் கலந்துகொண்டனர்.
ஜே.எட்வின் பீலிக்ஸ் (ராஜா) அகில இலங்கை சமுர்த்தி அபிவிருத்தி மற்றும் விவசாய ஆராய்ச்சி உதவி உத்தியோகத்தர்கள் சங்கத்தின் முந்தல் பிரதேச தலைவராகவும் கடமையாற்றி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
(ரஸீன் ரஸ்மின்)
