ஆட்டோவை பதம் பார்த்த புகையிரதம்; ஒருவர் பலி

சாஹிப் - புத்தளம்

புத்தளம் - ஆராய்ச்சிக்கட்டுவ பகுதியில் ரயிலுடன் முச்சக்கர வண்டியொன்று மோதியதில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

ஆராச்சிக்கட்டுவ ரயில் நிலையத்திற்கு அருகில் உள்ள ரயில் கடவையில் இந்த சம்பவம் இன்று (28) காலை 7.30 மணிக்கு இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்தில் இருந்து புத்தளம் தோக்கிப் பயணித்த ரயலுடன் முச்சக்கர வண்டி ஒன்று மோதியதில் இந்த விபத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இந்த விபத்தில் முச்சக்கரவண்டியை செலுத்திச் சென்ற நபர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார் என ஆராய்ச்சிக்கட்டுவ பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த விபத்துச் சம்பவம் தொடர்பில் ஆராய்ச்சிக்கட்டுவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Post a Comment

Previous Post Next Post