காலம் சென்ற குருநாகல் மாவட்டத்தின் முதல் முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர் மர்ஹூம் அலவி அவர்களின் மகன் தில்ஷாத் அலவி அவர்களுடைய சிறிய குழந்தை அக்லான் காலமானார்
(இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்)
ஜனாசா நல்லடக்கம் தெகிவளை மையவாடியில் இன்று காலை 11.30 மணிக்கு நடைபெறும்.
'அக்லான்' மரணம் வேதனையளிக்கிறது என அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாத் பதியுதீன் தனது முகநூலில் அனுதாபம் தெரிவித்துள்ளார்.
ரிஷாத் எம்.பி தனது அனுதாப செய்தியில் மேலும் தெரிவித்திருப்பதாவது,எனது மருமகள் (சகோதரியின் மகள்) ரிஷாவின் சிறிய குழந்தை "அக்லான்" அல்லாஹ்வின் அழைப்பை ஏற்றுக் கொண்டார்.
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.
எமது குடும்பத்தினரின் மிகவும் பாசத்திற்குரிய "அக்லானின்" இழப்பு எமக்கு மிக மன வேதனையை ஏற்படுத்தியுள்ளது. அனைவருக்கும் மரணம் நிச்சயிக்கப்பட்டது, எனினும் "அக்லான்" எம்மை முந்திவிட்டார்.
எல்லாம் வல்ல அல்லாஹ் குழந்தை அக்லானுக்கு ஜன்னதுல் பிர்தௌசுல் அஃலா எனும் உயர்மிகு சன்மானத்தை வழங்குவானாக! ஆமீன்.


