ஜப்பான் தூதரகத்தின் உயரதிகாரி காஸிமிய்யா அரபுக் கல்லூரிக்கு விஜயம்

ரஸீன் ரஸ்மின்

இலங்கைக்கான ஜப்பான் தூதரகத்தின் அரசியல் பிரிவின் உயரதிகாரி கனா மொரிவாக்கி ( Kana Moriwaki) தலைமையிலான குழுவினர் இன்று புத்தளம் காஸிமிய்யா அரபுக் கல்லூரிக்கு விஜயம் செய்தனர்.

கல்லூரியின் அதிபர் அஷ்ஷெய்ஹ் அப்துல்லாஹ் மஹ்மூத் ஆலிம் குறித்த குழுவினரை வரவேற்றார்.

அத்துடன், புத்தளத்தின் சமகால அரசியல், கல்வி, பொருளாதாரம், சுகாதாரம், வாழ்வாதாரம், வேலைவாய்ப்பு நிலைமைகள் தொடர்பாக  கல்லூரியின் அதிபர் அஷ்ஷெய்ஹ் அப்துல்லாஹ் மஹ்மூத் ஆலிமிடம் கேட்டறிந்துகொண்டனர்.

அத்தோடு, காஸிமிய்யா அரபுக் கல்லூரி வளாகத்தை பார்வையிட்ட அக்குழுவினர், அங்கு கல்வி பயிலும்  மாணவர்களையும் சந்நித்து கலந்துரையாடினர்.

மேலும், கல்லூரிக்கு வருகை தந்த குழுவினருக்கு கல்லூரியின் அதிபரால் நினைவுச்ச சின்மும் வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.





Post a Comment

Previous Post Next Post