நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் சிரமதானம்



வெசாக் தினத்தை முன்னிட்டு, முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் புத்தசாசன மற்றும் மத அலுவல்கள் அமைச்சுடன் இணைந்து  புத்தளம் பௌத்த மத்திய நிலையத்தில்  சிரமதான நிகழ்வொன்று நேற்று (02) ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இந்த சிரமதான பணியில் அஹதிய்யா மாணவர்கள், புத்தளம் காஸிமிய்யா அரபுக் கல்லூரி மாணவர்கள், உலமாக்கள், புத்தளம் பள்ளிவாசல் நிர்வாகிகள் மற்றும் சமூக நலன் விரும்பிகள் என பலர்  கலந்து சிறப்பித்தார்கள்.

இவ்வருடத்துக்கான (2023) தேசிய வெசாக் விழா இம்முறை புத்தளம் மாவட்டத்தின் சிலாபம் நகரில் நடத்துவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மேலும், குறித்த வெசாக் விழாவினை சகல மதங்களும் ஒன்றினைந்து பல்வேறுபட்ட நிகழ்வுகளின் ஊடாக சிறப்பிக்கவுள்ளமை இம்முறை விஷேட அம்சமாகும்.




Post a Comment

Previous Post Next Post