சாஹிப்
புத்தளம் - கொத்தாந்தீவு பகுதியைச் சேர்ந்த Motocross வீரர் கமால்தீன் ஹம்தான் தனது சொந்த ஊர் மக்களால் இன்று கௌரவிக்கப்பட்டார்.
கொத்தாந்தீவு கொலனியில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த சிறுவர்களுக்கான விளையாட்டு நிகழ்வின் போதே அவர் சின்னம் வழங்கி கௌரவிக்கப்பட்டார்.
கமால்தீன் ஹம்தான், 125cc மற்றும் 250 cc Motocross போட்டிகளில் தேசிய ரீதியில் கலந்துகொண்டு பல விருதுகளையும், பணப் பரிசில்களையும் பெற்றுள்ளார்.
மேலும், புனித நோன்புப் பெருநாளை முன்னிட்டு புத்தளம், நுரைச்சோலை மற்றும் கடையாமோட்டை ஆகிய பகுதிகளில் கடந்த வாரம் நடைபெற்ற Motocross மோட்டார் சைக்கிள் ஓட்டப் போட்டிகளில் கலந்துகொண்டு முதலாம், இரண்டாம் இடங்களை பெற்றுக்கொண்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.