மறைந்து கிடந்த எதிர்கால ஆளுமைகளும் மணல்குன்று அஹதிய்யா பாடசாலையின் வரலாறு காணாத வெற்றியும்

அகில இலங்கை அஹதிய்யா இடைநிலை சான்றிதழ் பரீட்சைக்கு சுமார் 7650 மாணவர்களுடன் போட்டியிட்டு சிறந்த பெறுபேற்றைப் பெற்றுள்ள மறைந்து கிடந்த எதிர்கால ஆளுமைகளும்  மணல்குன்று அஹதிய்யா பாடசாலையின் வரலாறு காணாத வெற்றியும், அல்லாஹ்வின் அருட்கொடையும் 2023/04/05

பலவருடங்களாக செயலிழந்து கிடந்த மணல் குன்று அஹதிய்யா  சன்மார்க்க பாடசாலை எனும் மாபெரும்  கல்விக்கூடத்தை புனர்நிர்மாணம் செய்ய பல பிரயத்தனங்களை மேற்கொண்டது.

இந்த நிலையில் இதனை பொறுப்பேற்று நடத்த யாருமில்லாத நிலையிலும் புத்தளம் மாவட்ட அஹதிய்யா பாடசாலைகளின் சம்மேளனம் ,அகில இலங்கை அஹதிய்யா பாடசாலகளின்  மத்திய சம்மேளனம், மற்றும் முஸ்லிம் சமய கலாசார அலுவல்கள் திணைக்களப் பணிப்பாளர்கள் அதன் தேசிய சபை உறுப்பினர்கள் ஆகியோரின் ஆலோசனைகள், வழிகாட்டல்களின் பேரில் மணல்குன்று அஹதிய்யா பாடசாலை ஆரப்பிக்கப்பட்டது.

மணல்குன்று முஸ்லிம் மகா வித்தியாலய அதிபர்,எம். முஹ்ஸீன், கன்னியமிக்க உலமாக்களான தலைவர் ஏ.எம்.றியாஸ் ஹாபிஸ்  மணல் குன்று அஹதிய்யா பாடசாலை,எம்.ஸனூஸ்  செயலாளர்,பிரதித் தலைவர்களான

,எம்,.எம்.இமாமுத்தீன் ,எச்.எப்.மைஸுரா, ஆசிரியர்களான எம்.ஏ.எம்.இஹ்ஸான், எம்.றிஸ்லான் எம்.ஹம்தி  அர் ரஷாதி,எம்.முபாஸ் எம்.ஹாதி,, ஏனைய ஆசிரியர்கள்  ஆசிரியர்களான அஹதிய்யா பாடசாலை அதிபர் எம்.என்.எப்.நளீஸா, உப செயலாளர் ஏ.எச். தஸ்னீம்,ஏ.எச்.எப்.றிஸானா ,ஸம்ஸுன் முனவ்வரா ராத்தா ஏனைய உறுப்பினர்கள் மற்றும் மணல் குன்று பிரதேச பள்ளிவாசல்களின் நிருவாகிகள், பாடசாலை அபிவிருத்திச் சங்க உறுப்பினர்கள்,கல்விமான்கள், பெற்றோர்கள், வாலிபர்கள் , பெண்மணிகள், சமூக சேவை நிறுவனப் பிரதிநிதிகள் என பலர் முன்வந்து மணல் குன்று பிரதேச  கல்வியில் மாற்றத்தை ஏற்படுத்துவதன் மூலம் வெற்றி காணமுடியும் என்ற தூர நோக்குடன் செயற்பட்டனர்.

மாணவர்கள், சிறுவர்கள், வாலிபர்கள் பிள்ளைகளுக்கு தங்களது நேரங்களை தியாகம் செய்து  உதவி செய்ததுடன் மாணவர்களுக்கு கற்பித்த மணல்குன்று அஹதிய்யா பாடசாலைகளான அஷ்ரபிய்யா மற்றும் மன்ப உஸ்ஸாலிஹாத்  பாடசாலைகளின் அதிபர்கள் ,தலைவர்கள், உலமாக்கள், ஆசிரியர்கள் நிருவாகிகள்  தமது அறிவால், உள்ளத்தால் உடலால் பணத்தால் சதுர உதவிகளால் உதவிசெய்ய பாடுபட்டுழைத்த அனைவருக்கும் அல்லாஹ் நற்கூலி வழங்குவானாக.

 அகில இலங்கை ரீதியில் அஹதிய்யா இடைநிலை சான்றிதழ்  பரீட்சைக்கு தோற்றிய சுமார் 7650மாணவர்கள் தோற்றினர். புத்தளம் மாவட்த்தில்537 மாணவர்களும் பரீட்சை எழுதியமை குறிப்பிடத்தக்கது.

மணல் குன்று அஹதிய்யா13 மாணவர்களும் பூரணமாக சித்தி அடைந்துள்ளதுடன்  இரு மாணவர்கள் மூன்று பாடங்களிலும் 3A சித்திபெற்றதுடன்  பாடசாலை ரீதியில் 21A சித்தியும் 8Bசித்தியும் 9Cசித்தியும்1Sசித்தியுமாக  பதின்மூன்று மாணவர்களும் சித்தியடைந்துள்ளமை பாராட்டத்தக்கது இப்பெறுபேறானது வரலாற்றில் பொன் எழுத்துக்களால் பொறிக்கப்படவேண்டியதாகும்.

புத்தளம் மாவட்ட சம்மேளனத்திற்கும் பெருமையையும் தேடித்தந்துள்ளனர் . அல்ஹம்துலில்லாஹ் அது மட்டுமன்றி மகிழ்வையும் தருகிறது அல்ஹம்துலில்லாஹ் மஷுரா அடிப்படையில் அனைவரும் இணைந்து செயற்பட்டால் அல்லாஹ்வின் அருட்கொடையும் கிடைத்திருப்பது அவதானத்திற்குரியதாகும்.

உலமாக்களது வழிகாட்டல் இன்றியமையாததாகும் ஏனைய அஹதிய்யா பாடசாலைகளுக்கும் முன்னுதாரணமாகும் அல்லாஹ் அனைவருக்கும் றமழானில் இரட்டிப்பு நன்மைகளை தந்தருள்வானாக இப்பெறுபேறுகளைப் போன்று ஏனைய அஹதிய்யா பாடசாலைகளின் மாணவர்களின் பெறுபேறுகளும் வெளிவர பிரார்த்திக்கிறேன் மேலும் சக அதிபர்கள் ஆசிரியர்கள் ஆகியோருக்கும் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன் . வஸ்ஸலாம் 


உங்கள் சகோதரன் பாரூக் பதீன் ஆசிரியர் -  பிரதித் தலைவர் மற்றும் உயர் சபை உறுப்பினர் 

அகில இலங்கை அஹதிய்யா பாடசாலகளின் மத்திய சம்மேளனம்  CF &MRCA



Post a Comment

Previous Post Next Post