முந்தலில் கரையொதுங்கிய சடலம்...!

முந்தல் நிருபர்

முந்தல் பிரதேச செயலகத்திற்குட்பட்ட பெரியபாடு கடற்கரையோரத்தில் சடலம் ஒன்று கரையொதுங்கியுள்ளதாக உடப்பு பொலிஸார் தெரிவித்தனர்.

கடந்த ஒரு வாரத்திற்கு முன்னர் கடலில் மிதந்து வந்த நிலையில் இந்த சடலம் இன்று கரையொதுங்கிருக்கலாம் என தாம் சந்தேகிப்பதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இவ்வாறு கரையொதுங்கியுள்ள சடலம் உருக்குலைந்த நிலையில் காணப்படுவதினால் அதனை இனங் காண முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக உடப்பு பொலிஸார் தெரிவித்தனர்.

புத்தளம் நீதவான் விசாரனை இடம்பெற்ற பின்னர்  குறித்த சடலம் புத்தளம் ஆதார வைத்தியசாலைக்கு பிரேத பரிசோதனைக்காக கொண்டு செல்லப்பட்டதாகவும் உடப்பு பொலிஸார் தெரிவித்தனர்.

மேலதிக விசாரனைகளை உடப்பு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Post a Comment

Previous Post Next Post