உள்ளூராட்சி மன்றங்களின் பதவிக்காலத்தை நீடிப்பதற்கு அரசு திட்டம்; எதிர்க் கட்சி குற்றச்சாட்டு

உள்ளூராட்சி மன்றங்களின் பதவிக்காலத்தை நீடிப்பதற்கு அரசாங்கம் திட்டமிடுவதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜே.சிஅலவத்துவல குற்றம் சுமத்தியுள்ளார்.

இன்று கொழும்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இவ்வாறு குற்றம் சுமத்தியிருந்தார்.

உள்ளூராட்சி மன்றங்களின் உத்தியோகபூர்வ பதவிக்காலம் நாளை நள்ளிரவுடன் நிறைவடைகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

இதனிடையே, உள்ளூராட்சி மன்றங்களின் பதவிக்காலத்தை நீடிக்க திட்டமிடப்படுவதாக ஜே.சிஅலவத்துவல குறிப்பிடுகின்றார்.

அரசியலமைப்பின் அடிப்படையில் உள்ளூராட்சி மன்றங்களின் பதவிக்காலத்தை நீடிக்க அமைச்சருக்கு அதிகாரமில்லை எனவும் அவர் தெரிவித்தார். 

இதனால் திருட்டுத்தனமான பாதையில் மீண்டும் செல்ல தயாராக வேண்டாம் என அரசாங்கத்திற்கு ஜே.சி. அலவத்துவல எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Post a Comment

Previous Post Next Post