கட்சியின் கற்பிட்டி பிரதேச அமைப்பாளர் கே.பீ. ரபீக் தலைமையில் இடம்பெற்ற இக் கூட்டத்தில் கட்சியின் கொள்கை பரப்புச் செயலாளர் ஸப்வான் சல்மான் பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.
இதன்போது, நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தல் குறித்த விடயங்களும் கலந்தாலோசிக்க ப்பட்டது.
மேலும், ஐக்கிய காங்கிரஸ் கட்சியின் எதிர்கால அரசியல் நடவடிக்கைகள் பற்றியும் கட்சியின் கொள்கை கோட்பாடுகள் பற்றியும் இங்கு கொள்கை பரப்புச் செயலாளர் ஸப்வான் சல்மான் அவர்களால் விளக்கமளிக்கப்பட்டது.
இந்த கூட்டத்தில் ஐக்கிய காங்கிரஸ் கட்சியின் உள்ளூராட்சி மன்ற வேட்பாளர்கள் ஆதரவாளர்கள் என பலரும் இக்கூட்டத்தில் கலந்து கொண்டனர்.