மாதம்பையில் டிப்பர் - அம்யூலன்ஸ் விபத்து; இருவர் காயம்

முஹம்மட் ரிபாக்

புத்தளம் - மாதம்பை பகுதியில் இன்று மாலை இடம்பெற்ற வீதி விபத்துச் சம்பவத்தில் இருவர் காயமடைந்துள்ளனர்.

டிப்பர் வாகனமும் - 1990 சேவையில் ஈடுபடும் நோயாளர் காவு வண்டியும் மோதிக் கொண்டதில் இந்த விபத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இதன்போது, குறித்த நோயாளர் காவு வண்டி சாரதி மற்றும் உதவியாளர் ஆகிய இருவரும் காயமடைந்துள்ளனர் எனவும் மாதம்பை பொலிஸார் கூறினர்.

இந்த விபத்தில் காயமடைந்த இருவரும் அங்கிருந்தவர்களால் மற்றுமொரு 1990 நோயாளர் காவு வண்டி மூலம் வைத்தியசாலைக்கு அழைத்து செல்லப்பட்டனர் என்றும் பொலிஸார் குறிப்பிட்டனர்.

அத்துடன், குறித்த நோயாளர் காவு வண்டியின் முன் பகுதி சேதமடைந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இந்த விபத்து சம்பவம் தொடர்பில் மாதம்பை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.



Post a Comment

Previous Post Next Post