புத்தளம் நிருபர்
மின்சாரக் கட்டணத்தை அதிகரித்தமைக்கு எதிர்ப்பு தெரிவித்து புத்தளம் வான் சந்தியில் நேற்று மாலை தீப்பந்தப் போராட்டமொன்று பிரதேச மக்களால் முன்னெடுக்கப்பட்டது.
குறித்த ஆர்ப்பாட்டதில் தற்போதைய அரசுக்கெதிராக சுலோகங்களை ஏந்தியவறும் கோஷங்களை எழுப்பியவாறும் மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.
இதன்போது ஜனாதிபதி ரணிலை கடுமையான முறையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மக்கள் விமர்சித்ததாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
