முஜிபர் ரஹ்மன் பாராளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து இராஜினாமா செய்திருப்பதை பாராளுமன்ற செயலாளர் நாயகம், தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவருக்கு எழுத்துமூலம் அறிவித்தார்.
கொழும்பு தேர்தல் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் மொஹொமட் முஜிபுர் ரஹ்மான் தனது பாராளுமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமாச் செய்யும் கடிதத்தை தம்மிடம் கையளித்திருப்பதாகப் பாராளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக்க தசநாயக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவருக்கு எழுத்துமூலம் அறிவித்துள்ளார்.