புத்தளத்தில் "தெம்பிலி கிராமங்கள்" சிறப்பு வேலைத்திட்டம் ஆரம்பம்!

இலங்கை தென்னை அபிவிருத்தி சபை  நடத்தும் புத்தளம் மாவட்டத்தில் மங்களபுர - பண்டாரநாயகபுர கிராமத்தில் இன்று 02.08.2026 புதன்கிழமை ஆரம்பித்து வைக்கப்பட்டது.

இந்நிகழ்வில் தென்னை விவசாயிகளுக்கான விழிப்புணர்வு பயிற்சி, சலுகை அடிப்படையில் தென்னை கன்றுகள்,  தென்னை பயிர் செய்கைக்கான காசோலைகள்,தென்னை பயிர் செய்கைக்கான ஆலோசனைகள்  வழங்கப்பட்டது.

மேலும் இந்நிகழ்வில் புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான அஜீத் ஜிகான் மற்றும் முஹம்மட் பைசல், புத்தளம் மாவட்ட தென்னை அபிவிருத்தி சபை பிராந்திய உத்தியோகத்தர் ஜனனி செனரத், வண்ணாதவில்லு பிரதேச சபையின் உறுப்பினர் சுரங்க குமார, வண்ணாதவில்லு பிரதேச செயலக தலைமை கிராம உத்தியோகத்தர் துஷாரி சூரியஹெட்டி, தென்னை அபிவிருத்தி சபை உத்தியோகத்தர்கள், பிரஜா சக்தி CDC தலைவர்கள், தென்னை பயிர் செய்கைக்காக தெரிவு செய்யப்பட்ட பயனாளிகள் கலந்து சிறப்பித்தனர்.



Post a Comment

Previous Post Next Post